பாதுகாப்பான முதலீடு: SBI அம்ரித கலசம் FD திட்டம் பற்றி தெரியுமா?
ஒவ்வொரு நபரும் தான் சம்பாதிக்கும் காலத்திலேயே பணத்தை பத்திரமாக எதிர்காலத்திற்கு சேர்த்துவைக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இதற்காக பல வழிகளில் முயற்சித்தாலும் பாதுகாப்பான, உறுதியான முதலீடு என்றால் அது Fixed Deposit தான்.
ஒவ்வொரு வங்கியும் FDல் பல திட்டங்களை அறிவிக்கின்றன, மூத்த குடிமக்கள் உட்பட வெவ்வேறு வட்டி விகிதங்களுடன் வெவ்வேறு கால அளவுகளில் திட்டங்கள் உண்டு.
இந்த பதிவில் SBI அம்ரித கலசம் FD திட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு இருந்தால் டிசம்பர் 31ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
400 நாட்களுக்கான FD திட்டமான இதில், மற்ற குடிமக்களுக்கு 7.5 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவிகிதமும் வட்டியை நிர்ணயித்துள்ளது.
நல்ல வருமானத்தை பெற விரும்பினால் இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
முதிர்வு முடிந்த பின்னரே உங்கள் தொகைக்கான வட்டியை பெறலாம், அதற்கு முன்னதாக உங்களுக்கு தேவைப்பட்டால் டெபாசிட் நேரத்தில் பொருந்தக்கூடிய விகிதத்தை பொறுத்து மாறுபடலாம்.
வெளிநாடுகளி்ல் வசிக்கும் இந்தியர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
ஏற்கனவே வைப்புத்தொகை வைத்திருக்கும் நபர்கள் இந்த திட்டத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம், இதில் கணக்கு இருப்பவர்களுக்கு Term Deposit மற்றும் Special Term Deposit வசதியும் உள்ளது.
இதில் இணைய விரும்பும் நபர்கள் வங்கியின் இணையதள சேவை மற்றும் YONO செயலி மூலமாக விண்ணிப்பிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |