திடீரென வைரலாகும் மறைந்த நடிகை சித்ராவின் வீடியோ: என்ன காரணம்?
சின்னத்திரை நடிகை சித்ரா டெடிபியருடன் கொஞ்சும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் ஆர்யாதான். சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை விஜே சித்ரா. இவர் முதல்முதலாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்னர் சின்னத்திரை பயணத்தை தொடங்கினார்.
அவர் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணம் 3 மாதங்களை கடந்தாலும் சித்ரா குறித்து செய்திகள் நாளுக்குநாள் வந்த வண்ணமே இருக்கிறது.
மேலும் நாள்தோறும் சித்ரா குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அந்த வகையில், நடிகை சித்ரா ஒரு டெடிபியர் பொம்மையுடன் கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான டெடி படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரபலங்கள் பலர் டெடிபியர் பொம்மையுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனுடன் தற்போது விஜே சித்ராவின் வீடியோவும் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் வீடியோ தற்போது டிரெண்டிங்காகி இருக்கிறது.