கோட் உடையில் செம்ம க்யூட்டாக இருக்கும் விடாமுயற்சி ஹீரோயின்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமூக வலைத்தளத்தில் மஞ்சள் நிறக்கோட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராவார். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சக்ரா, தலைவி, கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 33 வயதே ஆகும் ரெஜினா அஜித்தின் விடாமுயற்ச்சி படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கோட் சூட் அணிந்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார் ரெஜினா.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.