வெளிநாட்டில் ஜாலியாக நயன்தாரா,விக்னேஷ் - உலாவரும் உயிர் உலக்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் வெளிநாட்டில் மகன்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் தற்போது வைரலாகி வருகின்றது.

நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்கி
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் ரொமான்ஸிற்கு தற்போது பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

தங்களது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்துள்ளனர்.
நயன்தாரா என்னதான் குடும்பம் குழந்தை என இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் இன்னமும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நயன்தாரா தன்னுடைய குடம்பத்துடன் நேரம் செலவிடுவதில் சிறந்தவர்.


எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்து.
அந்த காணொளியில் நயன்தாரா மற்றும் அவரது மகன்கள் உயிரும், உலக்கும் தோள் மேல் கை போட்டுக்கொண்டு ஜாலியாக வீதியை சுற்றி வந்த காணொளி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
Vacation Time 🩷👀🎊#Nayanthara #Ladysuperstar #trending pic.twitter.com/3SVmBuSyw0
— Nayan wings (@Nayan_Universal) May 20, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |