பிக்பாஸ் டாஸ்கில் விசித்ரா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்: சிக்கலில் பாலகிருஷ்ணா?
நடிகை விசித்ரா திரையுலகில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தற்போது சமூ க வளைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றார்.
பிக் பாஸ் விசித்ரா
பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் குறித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ரா, தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அப்போது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு படத்தில் நடித்தபோது டாப் ஹீரோ ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்றும் மனவேதனையுடன் கூறி கண்ணீர் சிந்தினார்.
அந்த சம்பவத்துக்கு பின் தான் சினிமாவை விட்டே விலகியதாக விசித்ரா கூறி இருந்தார். விசித்ரா சொன்ன அந்த சம்பவத்தை பற்றி ஆராயத் தொடங்கிய நெட்டிசன்கள் அந்த டாப் ஹீரோ யார் என்பதையும் தேடி கண்டுபிடித்தனர்.
அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு திரையுலகில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் பாலகிருஷ்ணா தான். அவர் படத்தில் நடித்தபோது தான் விசித்ராவுக்கு இப்படி நடந்தது என ஆதாரத்தோடு நெட்டிசன்கள் வெளியிட்டதால், பாலகிருஷ்ணா பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது. விசித்ரா பேசுகையில் தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரும் ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் விசித்ராவை அறைக்கு அழைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் ஏ.விஜய் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘பலேவடிவய்யா பாசு’, என்ற படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளை பரப்பி வருகின்றனர். இது தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
#Vichitra shares her casting couch atrocity happened at this 2001 Telugu film "Bhalevadivi Basu" ft. #Balakrishna
— VCD (@VCDtweets) November 21, 2023
• First shoot day - Hero asked to come to his room. On refusing to go, everyday there was someone banging doors of her room - this made her change rooms everyday… pic.twitter.com/4UtyqFuUNY
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |