அடிக்கடி பசி ஏற்படுவது ஆபத்தா? இந்த பிரச்சனையாக இருக்கலாம் ஜாக்கிரதை
உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மிகவும் முக்கியமானது. இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.
நாம் அதிக நேரம் சாப்பிடாமல் இருந்தால் பசி ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் கூட பலருக்கும் பசி ஏற்படுவதுண்டு. இவ்வாறு அடிக்கடி பசி ஏற்பட்டால் அதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பசி ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி பசி ஏற்படுவது ஆபத்தா?
நமக்கு ஏற்படும் மனஅழுத்தம் அதிகப்படியான பசி ஏற்படுவதற்கு ஒரு காரணமாகின்றது. ஆம் பதற்றமாக இருக்கும் போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் பசி உணர்வு ஏற்படுகின்றது.
குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால், பசி ஹார்மோன் என்று கூறப்படும் கிரேலின் என்ற ஹார்மோன் உற்பத்தி ஏற்படும். இதனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசி எடுக்க தொடங்கிவிடுகின்றது. அதாவது குறைந்த அளவு நார்ச்சத்து, கொழுப்பு புரதம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதே காரணம்.
இதே போன்று நாம் சத்தான உணவுகளை உட்கொண்டாலும் பசி ஏற்படும். இதற்கு காரணம் சாப்பிடும் போது உணவில் கவனம் இல்லாமல் வேறு எதையாவது யோசித்துக்கொண்டு உண்பதே காரணம்.
மேலும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது இவைகளால் அடிக்கடி பசி ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வேகமாக சாப்பிடுவது தற்சமயம் பசியை போக்கிவிடும் என்றாலும் அடுத்த சில நிமிடங்களில் பசியை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்று நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கும் இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்படலாம்