உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!
வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதந்தோறும் தனது ராசியை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

தற்போது சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சுக்கிரன், ஜூலை 29 ஆம் தேதி சூரியனுக்குரிய உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சூரியனும் சுக்கிரனும் இயல்பில் பகைமை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுவதால், இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளில் வாழ்வில் அதிக சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டத்தில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தினால் நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும், இந்தக் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
மிதுனம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது.
குடும்பத்தினருடன் சிறிய விஷயங்களுக்குக் கூட மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உறவுகளை கவனமாக கையாள வேண்டும்.
பேசும் வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். புதிய முதலீடுகளை மேற்கொள்ள நினைத்தால், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு எடுப்பது நல்லது.
சிம்மம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். குறிப்பாக அகங்காரம் அல்லது அதீத தன்னம்பிக்கை வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பை பேணுவது அவசியம். இல்லையெனில் தேவையற்ற சிரமங்கள் உருவாகலாம்.
காதல் வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
[55PFRN
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனம் அவசியம்.
முடிந்தவரை முக்கியமான பரிவர்த்தனைகளை ஒத்திவைப்பது நல்லது. வேலை தொடர்பாக தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம்.
அவை நிதி இழப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால், பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |