ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்: செப்டம்பர் 11 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதத்திற்கு ஒருமுறை ராசியையும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். சுக்கிரனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிரன், செப்டம்பர் 11ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, ராகுவின் ஆதிக்கம் கொண்ட சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமைய உள்ளது.
குறிப்பாக, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதுடன், எடுத்த காரியங்களில் வெற்றியும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
ஏற்கனவே முதலீடுகள் செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் காரியங்களில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலகட்டம் அதற்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதன் மூலம் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |