சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்!
ஜோதிட சாஸ்திரன் பிரகாரம் அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்ப்படுகின்றது.
அந்தவகையில், சுமார் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைய உள்ளார்.

வேத ஜோதிடத்தில் சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், ஆற்றல், அங்கீகாரம் மற்றும் உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறார். புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் சூரியன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றமாகக் பார்க்கப்படுகின்றது.
இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் அதேவேளை, சில ராசிகளுக்கு தடைகள் மற்றும் சவால்களை ஏற்படுத்தும்.
அப்படி தொழில் வாழ்க்கையிலும் நிதி நிலையிலும் பின்னடைவை எதிர்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் பணிச்சுமை அதிகரிக்கலாம். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் பணிச்சூழலில் சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் வேலையை விடும் எண்ணம் வந்தாலும், அவசர முடிவு எடுக்க வேண்டாம். முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், பயணங்களில் விபத்து அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக வார்த்தைகளில் நிதானம் தேவை.
சிம்மம்

சிம்ம ராசியின் ஐந்தாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் எதிர்பாராத சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். குழந்தைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கலாம்.
எனவே, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.குறிப்பாக இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.
தனுசு

தனுசு ராசியின் பத்தாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். சில சூழ்நிலைகள் மோதலுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொறுப்புகளை கவனமாக கையாளுங்கள்.
உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியாமல் போகலாம்; திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். வியாபாரிகளும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |