மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி : 2025 இல் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக மற்றும் பாதக மாற்றங்களை எற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் பிரகாரம். சுக்கிரன் மீன ராசிக்குள் இடம்பெயர்ச்சியடையும் போது மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது.
இந்த ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பேரரதிஷ்டத்தையும் நிதி நிலையில் அசுர வளர்ச்சியையும் ஏற்படுத்தவுள்ளது. அப்படி சுக்கிரனால் பலனடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டில் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ரிஷப ராசியினரின் வாழ்வில் பல்வேறு நல்ல மாறுதல்களை கொடுக்கப்போகின்றது.
இவர்களுக்கு பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. புதிய ஆண்டில் புதிய சொத்துக்கள் வாங்கி மகிழும் வாய்ப்புகள் அமையும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாள் கண்ட கனவு நனவாகம். சுக்கிரனின் முழுமையான ஆசீர்வாதம் ரிஷப ராசியினருக்கு இருப்பதால் ஆடம்பர வாழ்க்கையை வாழப்போகிக்றார்கள்.
தனுசு
மாளவ்ய ராஜயோகத்தால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பாரிய நிதி முன்னேற்றம் ஏற்படும். இவர்களின் வசதிகள் அதிகளிக்கும்.
புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய ஆசியை சுக்கிரன் கொடுக்கப்போகின்றார். பணவரவு ஆண்டு முழுவதும் சீராக இருக்கும்.
பரம்பரை சொத்துக்களால் லாபம் கிடைக்கும் வாயப்புகள் காணப்படுகின்றது. தொழில் நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
மாளவ்ய ராஜயோகம் கும்ப ராசியினர் வாழ்வில் மங்களகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.
எதிர்பாரத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியடையும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டில் தொழில் விடயங்களிலும் நிதி ரீதியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் தானாகவே உயரும். மொத்தத்தில் இந்த காலகட்டம் பொற்காலமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |