குக் வித் கோமாளி: மணிமேகலை விலகியது ஏன்? செஃப் வெங்கடேஷ் பட் என்ன சொல்லியிருக்கிறார்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி கொண்டிருந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே பெஸ்ட் தான், அந்தளவுக்கு நெகடிவ் விமர்சனங்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சி.
தங்களது கவலைகளை மறந்து சந்தோஷமாக மக்கள் பொழுதை கழிக்கலாம், அதிலும் கோமாளிகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது, ரகளையுடன் சமையலுடன் தடபுடலாக நடக்கும்.
இந்நிலையில் திடீரென பேஸ்புக்கில் பதிவிட்ட மணிமேகலை, தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாக வருத்தத்துடன் பதிவிட்டார்.
அதில், இதுதான் குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோட், 2019ம் ஆண்டு முதல் குக் வித் கோமாளியின் அனைத்து எபிசோட்களிலும் எனக்கு ஏகப்பட்ட அன்பை வாரி வழங்கியுள்ளீர்கள், அதற்கு நன்றி.
எனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவே நான் நினைப்பேன், உங்களையும் மகிழ்வித்திருப்பேன் என்றே நம்புகிறேன், நீங்கள் வழங்கிய ஆதரவு நான் எதிர்பாராத ஒன்று, இந்த அன்பு என்னுடைய அடுத்த அடுத்த கட்டங்களிலும் கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மணிமேகலையின் இந்த பதிவு வைரலாக பலரும் சோகமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட், மணி நீ தான் பெஸ்ட் Lady கோமாளி, நான் சந்தித்தவர்களில் நீயும் ஒரு சிறந்த மனிஷி, நீ இப்படி மற்றவர்களை மகிழ்விப்பது எல்லாம் உன் கூடவே பிறந்தது.
குக் வித் கோமாளியில் உன்னுடன் நிறைய நல்ல அனுபவங்கள் இருக்கிறது.
கடைசி வரை அதை மறக்கமாட்டேன், உன் வாழ்வில் சிறந்த நிலைக்கு செல்ல நான் வாழ்த்துகிறேன், கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மணிமேகலை, மிகவும் நன்றி சார், செஃப் என்பதையும் தாண்டி என்னை ஊக்குவிக்கும் நபர் நீங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.