குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்து பிரபல நடிகை திடீரென வெளியேறியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
குக்கு வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் கொமடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், நாய் சேகர் படத்தை இயக்கிய கிஷோர், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
வெளியேறிய மணிமேகலை
இதில் ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டும் கலந்து கொண்ட நிலையில், பின்பு வெளியேறினார். கடந்த வாரம் கிஷோர் போட்டியாளரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆம் நடிகை விசித்திராவின் தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து திடீரென வெளியேறினார்.
தற்போது மணிமேகலை வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து மணிமேகலை கூறுகையில், குக் வித் கோமாளியில் இன்றுதான் எனது கடைசி எபிசோடு. நானே வருவேன் கெட்டப்பில் இருந்து நான் வரமாட்டேன் என அறிவிக்கிறேன்.
2019ம் ஆண்டு ஆரம்பித்த குக் வித் கோமாளி முதல் சீசனிலிருந்து என் மீது ரசிசர்கள் அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறோன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.
நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவரின் வெளியேற்றத்தினைக் குறித்து நடுவர் வெங்கடேஷ் உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.