குக்வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில இவ்வளவு பெரிய சோகமா? கண்கலங்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் குக்வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட குக் முதல், கோமாளிகள் வரை தங்கள் வாழ்க்கையில பட்ட கஷ்டங்களை கூறி வந்துள்ளனர். அந்தவகையில், குக் வித் கோமாளியில் நடுவராக இருந்து வருபவர் தான் பிரபல செஃப் வெங்கடேஷ் பட்.
இவர், இந்த ஷோவில் போட்டியாளர்கள் சமைக்கும் உணவை சுவைத்து மார்க் போடுவது மட்டும் அல்லாமல், அவ்வப்போது அவர் செய்யும் அட்ராசிட்டியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இன்றைக்கான வாரத்தில் எலிமினேஷனில் பவித்ரா வெளியேறினார். அப்போது வெளியில் போகும் முன்பு அவர் பேசும்போது “இந்த ஷோவில் பங்கேற்றது எனக்கு depression-ல் இருந்து மீள உதவியது” என உருக்கமாக தெரிவித்தார். அதன் பின் பேசிய வெங்கடேஷ் பட் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் மற்றும் தடைகள் பற்றி பேசினார்.
அதில், தானும் depression ஆக இருந்தது பற்றி பேசிய அவர், குக் வித் கோமாளி ஸ்ட்ரெஸ் பஸ்டர் என சொல்பவர்கள் கோடிக்கணக்கான ஆட்கள் இருக்கிறார்கள். என்னை விட depression-க்கு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. நான், 4-ம் வகுப்பில் பெயில், 8-ம் வகுப்பில் பெயில் , 9-ம் கிளாசில் 2 முறை பெயில். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்தது லேட்.
கெரியரை துவங்கியது லேட்... எனக்கு ஹோட்டலில் வேலை கிடைத்தது லேட்,கல்யாணம் லேட், என் முதல் டிவி ப்ரோக்ராம் வெளியான அன்று என் அம்மா ரயில் விபத்தில் இறந்துவிட்டார். என் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதில் இருந்து நான் இன்னும் வலிமையாக மீண்டு வந்தேன். அதை உடைத்து நாம் முன்னுக்கு வருவது நம் கையில் தான் இருக்கிறது என வெங்கடேஷ் பட் உருக்கமாக பேசினார்.