சரிகமப மேடையில் தந்தையை பெருமைப்படுத்திய போட்டியாளர் கண்கலங்கிய தருணம்
சரிகமபவில் தன் தந்தையை பெருமைப்படத்திய போட்டியாளர் யோகஸ்ரீயின் காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரிகமப
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் Retro Round சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் எலிமினேஷன் எதுவும் இருக்கவில்லை.
இதனை தொடர்ந்து இந்த வாரம் Dedication Round சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் ஒவ்வெதருவரின் பெர்போமன்ஸ் தற்போது குறுகிய காணொளிகளாக வெளியாகி வருகின்றது.
இதில் போட்டியாளர் யோகஸ்ரீ தனது தந்தையை பெருமைப்படுத்தும் விதமாக 'சூரியனும் பெக்க வில்ல சந்திரனும் சாட்சி இல்ல' என்ற பாடலை சிறப்பாக பாடி உள்ளார்.
இதற்கு ரசிகர்கள் முதல் அரங்கத்தில் இருந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். போட்டியாளரின் தந்தை ஆனந்தக்கண்ணீரில் மகளை அணைத்து முத்தமிடும் காட்சி தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |