ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை பெண் ஒருவர் வெறும் ரூ.700க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாயிடமிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை திருடியுள்ளார்.
இதனையடுத்து தாய் தனது நகையைக் காணவில்லை என்று போலிசாரிடம் புகார் அளித்த நிலையில், விசாரணையில் மகள்தான் நகையை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
மேலும் அவரிடம் விசாரணையை மேற்கொண்ட போது லிப்ஸ்டிக் வாங்குவதற்கு பணம் இல்லை என்பதால், நகையை எடுத்ததாக கூறியுள்ளார்.
ஆனாலும் குறித்த நகை கவரிங் என்று நினைத்து எடுத்ததாகவும், வெறும் ரூ.700க்கு விற்று லிப்ஸ்டிக் வாங்கியதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து போலிசார் நகையை விற்பனை செய்த கடைக்குச் சென்று நகையை மீட்டு பெண்ணின் தாயிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கிய கடைக்காரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |