சீரியல் நடிகை ரேணுகாவுக்கு நிச்சயதார்த்தம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
சீரியல் நடிகை ரேணுகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பிறப்பது என நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் நடந்து வருகிறது.
அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ரேனுகாவின் நிச்சயதார்த்தம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி, பனிவிழும் மலர்வனம் மற்றும் தங்கமகள் ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரேனுகா.
சின்னத்திரை நடிகை என்பதை தாண்டி தொகுப்பாளினியாகவும் இவர் நிறைய தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவருக்கும் பாலகணேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரேணுகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |