புசு புசு இட்லிக்கு நல்லெண்ணெய் சட்னி ! 2 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?
இட்லிக்கு சுவையை கூட்டுவது சட்னி. பல வகையான சட்னி உள்ளது.
இன்று நாம் காரமான சட்னியை நல்லெண்ணெய் போட்டு தாளித்து சுவையாக செய்து பார்க்கலாம்.
நல்லெண்ணெய்யில் இருக்கிற கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படியாது.
அதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. மாரடைப்பும் வராது. ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவ பலன்களை கொடுக்க கூடிய சட்னியை மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய் - 10
- பூண்டு பல் - 3
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு
தாளிக்க
- நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில் சுவையான சட்னி செய்வதற்கு காய்ந்த மிளகாய் ,பூண்டு பல் , புளியுடன் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.
இட்லியுடன் சேர்த்து பரிமாறவும்.