நீரிழிவு நோய்க்கு அருமருந்து! வீட்டிலேயே வெந்தயக்கீரை வளர்ப்பது எப்படி?
ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களில் முக்கியமானது வெந்தயம், இதன் கசப்பு தன்மை பலருக்கும் பிடிக்காததால் வெந்தயத்தை சாப்பிடத் தயங்குவார்கள்.
ஆனால் இதில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது, இதன் கீரைகளுக்கும் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை உண்டு.
பயன்கள்
அஜீரணக் கோளாறுகள் மற்றும் மோசமான குடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது வெந்தயக்கீரை.
நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் ட்ரைகிளிசரைகள் ஆகியவற்றை குறைத்து உயர் அடத்தி கொழுப்பு புரதத்தை அதிகரிக்கிறது.
வெந்தய கீரையைத் தொடர்ந்து 50 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
இதயத்தில் திடீர் ரத்தம் உறைதலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது, உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.
வீட்டிலேயே வளர்ப்பது எப்படி?
வெந்தயக்கீரையை மிக எளிமையாக வீடுகளிலேயே வளர்க்கலாம், நம் வீடுகளில் இருக்கக் கூடிய பயனற்ற டப்பாக்கள் அல்லது தொட்டிகளில் சிறிது மண்ணைப் போட்டுக் கொள்ளுங்கள்.
தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாளில் இரவிலேயே ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
முளைவிட்டதும் இதை அப்படியே மண்ணில் தூவிவிடலாம், மறுநாள் காலை தொட்டிகளில் மண்ணை 3/4பாகத்துக்கும் கொஞ்சம் குறைவாக நிரப்பி ஊறிய வெந்தயத்தைத் தூவி விட்டு, மேலே இன்னும் கொஞ்சம் மண்ணையும் தூவி விட்டு தண்ணீர் விடவும்.
விதைத்த மூன்றாம் நாளே சிறு துளிர்கள் வெளிப்பட்டு, வெந்தய நாற்றுகள் வளரத்தொடங்கும், வெந்தயத்தை தூவும் போது சிறிது இடைவெளிவிட்டு தூவிவிடவும், 10-13 நாட்களில் வெந்தயக்கீரை வளர்ந்து சமைக்கத் தயாராகிவிடும்.