இது முழுக்க முழுக்க சைவ நகரமாம்! அசைவத்துக்கு தடை
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் வித்தியாச வித்தியாசமான சிறப்புக்கள் காணப்படுகின்றன.
அவை பல நேரங்களில் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. சரி இனி இந்தியாவின் குஜராத்திலுள்ள பாலிதானா நகரத்தைப் பற்றி பார்ப்போம்...
நம்மில் பல பேருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீதுதான் விருப்பம் அதிகம். ஆனால், ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமளிக்கின்றதா?
image - You tube
ஆம், பாலிதானா என்று கூறப்படுகின்ற இந்த நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு இறைச்சி, முட்டைகளை நுகர்தல் விற்பனை செய்தல் என்பது முற்றிலும் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.
அதுமாத்திரமில்லாமல் இந்த நகரத்தின் ஒரே மலையில் 900க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றனவாம். இது உலக சாதனையாக பார்க்கப்படுகின்றது.
ஜெயின் மதத்தை கடைபிடிப்பவர்களுக்கு இது மிகவும் புனிதமான இடமாகும். சமண மதத்தின் தலமாக இருப்பதே இது சைவ நகரமாக இருப்பதற்கு இன்னொரு காரணமாக இருக்கின்றது.
image - Awadhi cuision resturant in abu dhabi
பாலிதானா எவ்வாறு சைவ நகரமாக மாறியது?
2014ஆம் ஆண்டில் 200 ஜென் துறவிகள் 250 இறைச்சிக் கடைகளைத் தடைசெய்து, நகரத்தை இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்பது சமண மதத்தவர்களின் முக்கிய கொள்கையாக காணப்படுகின்றது. இவர்களிடம் நிலத்துக்கு அடியில் விளையும் காய்கறிகளை உண்ணும் பழக்கம் கூட இல்லையாம்.
இவ்வாறு சமண மதத்தவர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இறைச்சியை அரசாங்கம் தடை செய்துள்ளது.
ஆனால், இங்கு நெய், பால் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உண்ணப்படுகின்றன.
image - The statesman