ஆட்டு இறைச்சி எப்படி பார்த்து வாங்கவேண்டும்?.. முக்கியமான அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
எந்த இறைச்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்.?நன்மை தீமைகள் என்ன.? ஆட்டு இறைச்சி ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். ஆனால், தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாக இருக்கும்.
அதற்குக் காரணம் ஆடு நடக்கிற போது, தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டித்தன்மையுடன் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். எனவே ஆட்டு இறைச்சி வாங்கும் போது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்கு பின்புறம் உள்ள முதுகு தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
மேலும், ஆட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது. உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான். ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் கொண்டது. அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக ஆட்டுக் கொழுப்பை சொல்லலாம். ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும். ஆட்டின் தலை இறைச்சி சூடு , வளமை , குளிர்ச்சி , இவைகள் மூன்றும் சமமாக இருக்கும்.
நன்மை : குடல் புஷ்டி உண்டாக்கும் , உடல் தழைக்கும், இருதய கமலம் சம்பந்தமான நோய்களை கண்டிக்கும். சத்து அதிகரிக்கும் , மலம் குறையும்.
ஆட்டின் தலை மூளை
நன்மை : சூட்டை அகற்றும் , தோளின் மேல் இருக்கும். தோலுக்கு மினுக்கு உண்டாகும் ,பசுமை கொடுக்கும்.