Vegetable Soup: ஜலசோஷத்திற்கு பூண்டு தட்டிப் போட்டு சூப்
பொதுவாக காலநிலை மாற்றங்கள் வரும் பொழுது, சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலும் மழைக்காலங்கள் சளி, இருமல் பிரச்சினையால் குழந்தைகள், பெரியவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நமது வீடுகளில் இருமலுக்கான மருந்துகள் எப்போதும் இருக்கும்.
ஆனால் இப்படியான பிரச்சினைகள் வந்து விட்டால் ஆங்கில மருத்துவத்தில் நிவாரணம் கொடுப்பதை விட வீடுகளில் உள்ள சில பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
எமது முன்னோர்களிடம் சளி, இருமலை நிரந்தரமாக நீக்கும் மருந்துகள் பல உள்ளன. உணவே சிறந்த மருந்து.. என கேள்விப்பட்டிருப்போம். இதன்படி, சளி, இருமல் வந்து விட்டால் அதனை ஓட விடும் வகையில், காய்கறிகள் நிறைய போட்டு காரசமாக சூப் வைத்து கொடுக்க வேண்டும்.
இது உங்கள் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு புது விதமான சக்தியை கொடுக்கும். ஆரம்பத்திலேயே சளி இருமலை இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனின் குழந்தைகளாக இருந்தால் வேறு விதமான பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும்.

அந்த வகையில், சளி, இருமலை ஓட விடும் வெஜிடேபிள் சூப் எப்படி இலகுவாக தயாரிக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்ணெய் - 2 மேசை கரண்டி
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் - 5
- முட்டைக்கோஸ் - 1 கப்
- கேரட் - 1/2 கப்
- பீன்ஸ் - 1/2 கப்
- ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/2 கரண்டி
- மிளகுத் தூள் - 1 கரண்டி
- சீரகத் தூள் - 1/2 கரண்டி
- சோள மாவு - 2 கரண்டி
- கொத்தமல்லி - கைபிடி அளவு
- தண்ணீர் - 1 லிட்டர்
- கார்ன் சிப்ஸ் - தேவையான அளவு
சூப் வைப்பது எப்படி?
முதலில் உங்களுடைய வீட்டில் உள்ள குக்கரை நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக வெண்ணெய் விட்டு உருகியதும், பூண்டு, இஞ்சி போன்று நன்றாக வதங்க விடவும்.

அதன் பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு கிளறி விட்டு, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், ஸ்வீட் கார்ன் அனைத்தையும் ஒன்றாக போட்டு கொஞ்சமாக வதங்க விடவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் போட்டு கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் உள்ள காய்கறிகள் கொஞ்சம் வெந்தவுடன் நன்றாக கரண்டியால் மசித்து விடவும்.
மசித்த காய்கறிகளுடன் வடிகட்டி கட்டி வைத்திருக்கும் நீரையும் ஒன்றாக போட்டு, மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதனுடன் சோள மா, கொத்தமல்லி தழை போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் காரசாரமான சூப் தயார். அதில் தேவையிருந்தால் கொஞ்சமாக கார்ன் சிப்ஸ் தூவிக் கொள்ளலாம்.
இது உங்கள் தொண்டையில் அடைத்து கொண்டிருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |