வீட்டில் 2 தக்காளி இருக்கா? அப்போ வித்தியாசமான சுவையில் பாயாசம் செய்ங்க
விட்டில் ஏதாவது நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றால் அம்மா கேசரி, பொங்கல், பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து தருவார்.
அதில் மிக முக்கியமாக பாசம் செய்வார்கள். குறிப்பாக சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், ஆப்பிள் பாயாசம் போன்ற விதவிதமான பாயாசங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் தக்காளி பழங்கள் வைத்து வித்தியாசமான சுவையில் எப்படி தக்காளி பாயாசம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது ஆனால் பக்குவத்தில் சமைப்பது அவசியம்.

தேவையான பொருட்கள்
- தக்காளி - அரை கிலோ
- அரிசி - 3 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - அரை மூடி
- முந்திரி, திராட்சை - 10
- ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
- கிராம்புத்தூள் - அரை தேக்கரண்டி
- சர்க்கரை - கால் கிலோ
- நெய் - சிறிதளவு

செய்யும் முறை
இந்த தக்காளி பாயாசம் செய்வதற்கு முதலில் தக்காளி பழங்களை நன்கு கழுவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக அதிக நேரத்திற்கு தக்காளியை வேக விடாதீர்கள்.
கொஞ்சமாக வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸியில் அல்லது கைகளால் நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
விதைகள் எதுவும் தேவையில்லையென்றால் வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும். அடுத்து அரிசி, தேங்காய் பூ, முந்திரி மற்றும் கிராம்புத் தூள் போன்றவற்றைச் சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிஅரைத்து வைத்துள்ள தக்காளி சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இது தான் தக்காளி பாயாசம் செய்வதற்கான கலவை.
இதையடுத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தக்காளி சாறை கொதிக்க விடவும். இது ஐந்து நிமிடங்கள் கொதித்த பின்னதாக ஏலக்காய் மற்றும் கிராம்புத்தூள் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
இறுதியாக நெய்யில் முந்திரி, திராட்சை போன்றவற்றை வறுத்து தக்காளி கலவையுடன் சேர்த்தால் சுவையான தக்காளி பாயாசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |