Lottery Winner: காய்கறி வியாபாரிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - 11 கோடி ரூபாய் பரிசு
சிறிய வண்டி ஒன்றில் காய்கறி விற்கும் வியாபாரி ஒருவருக்கு லாட்டரி மூலம் பெரிய பணத்தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.
லாட்டரி பரிசு
சிறிய வண்டியில் காய்கறி விற்கும்32 வயதான அமித் செஹ்ரா தற்போது அதிர்ஷடத்தை பெற்றுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள மோகாவுக்குச் சென்றபோது அவரது நண்பரிடமிருந்து ரூ.1,000 கடன் வாங்கி இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
இது கேட்க நீங்கள் நினைக்கலாம் அது ஏன் கடன் வாங்கி வாங்க வேண்டும் என்று அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பி விட்டார் எதையும் செய்யலாம் அதற்கு நாம் போட்ட வித்து ஒரு நாள் மரமாக மாறி உதவும் என்பதற்கு இந்த நபர் ஒரு உதாரணம்.
இந்த நபர் அந்த கடன் வாங்கிய பணத்தில் ஒரு டிக்கட் தனக்கு என்றும் இன்னொன்று அவருடைய மனைவிக்கு என்று வாங்கி உள்ளார். இதில் பரிசு இருக்கிறது என்பது அவருக்கு தெரியாது.
ஆனால் செஹ்ரா வெறும் ரூ.500க்கு வாங்கிய அதிர்ஷ்ட டிக்கெட் அவரை உடனடி மில்லியனராக மாற்றியது. அவர் வாழ்நாளில் சம்பாதித்து எடுக்க முடியாத பணத்தை தற்போது அது கொடுத்தது.
முதலில் அவருக்குகென்று வாங்கிய டிக்கட்டில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது. அவருடைய மனைவியின் டிக்கடும் வீணாகவில்லை அதற்கும் பரிசு கிடைத்துள்ளது.

ஆம், அவருக்கு சுமார் ரூ.11 கோடி பரிசாக விழுந்துள்ளது. தன் மனைவிக்கு வாங்கிய டிக்கெட்டும் வீணாகவில்லை, அதற்கும் ரூ.1,000 பரிசாக விழுந்துள்ளது.
இதன் பின்னர் செஹ்ரா தனது குடும்பத்தினருடன் பதிண்டாவுக்குச் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து டிக்கெட் பணத்தை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார் அவர் கூறுகையில், "எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை.

பஞ்சாப் அரசுக்கும், லாட்டரி நிறுவனத்திற்கும் நன்றி கூறுகிறேன். இன்று எனது துயரம் அனைத்தும் மறைந்துவிட்டன" என்று கூறியதுடன் அவர் தான் ஒரு "ஹனுமனின் பக்தர்" என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் இந்த பணத்தில் கருணையின் அடிப்படையில் தனது நண்பரின் இரண்டு மகள்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாக செஹ்ரா தெரிவித்தார்.
இப்படி லாட்டரி பரிசு குறித்து அவர் உணர்வு பூர்வமாக பேசிய காணொளியும் தற்போது வைரலாகி வருகின்றது.

"நான் எனது தாயை இழந்துவிட்டேன், அதனால் மகள்களின் வலியை புரிந்துகொள்கிறேன். மீதமுள்ள பணம் என் குழந்தைகளின் கல்வி மற்றும் வீடு கட்டுவதற்கு உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பணப்பரிசுகள் இப்படி கஷ்டப்படும் மக்களுக்கு கிடைப்பது உண்மையில் இநத பிரபஞ்சம் செய்யும் உதவி என கூறுவது மிகையாகாது.
#WATCH | Chandigarh: Amit Sehara from Rajasthan wins Rs 11 Crore in Punjab Lottery Result Diwali Bumper Prize 2025, says, "... I can't express my happiness. I thank the Punjab government and the lottery agency. All my grief and sorrows have vanished today. I have won Rs 11… pic.twitter.com/jHyfWyfLcp
— ANI (@ANI) November 4, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |