எந்த பொரியல் செய்தாலும் சுவை தாறுமாறாக இருக்கணுமா? இதை பயன்படுத்தினால் போதும்
உணவில் எந்த பொரியல் செய்தாலும் அதை சுவை மிகுந்ததாக மாற்ற வேண்டுமெனில் இந்த பொடியை அரைத்துக்கொள்ளுங்கள்.
இதை சமைக்கும்போது காரத்திற்கு பதில் தூவி சமைத்தால் வீடே மணக்க பொரியல் மணக்கும்.
தேவையான பொருட்கள் :
தனியா - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடலை ப்ருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வேர்கடலை - 2 ஸ்பூன்
எள்ளு - 1 ஸ்பூன்
பூண்டு பல் - 10
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் - 10
செய்முறை
முதலில் கடாய் வைத்து எண்ணெய் எதுவும் ஊற்றாமல் தனியாவை 1 நிமிடத்திற்கு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கடுகு, கடலை பருப்பு என அனைத்தையும் சேர்த்து மணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் ஆறியதும் ஜாரில் மொத்தமாக சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.
அவ்வளவுதான் பொரியலுக்கான பொடி தயார். இதை டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு தேவையான போது பொரியலில் தூவி சமையல் செய்து சாப்பிடலாம்.