சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா இந்த கீரை பொரியல் சாப்பிடுங்க!
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது, இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது, நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது.
இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சத்தான வல்லாரை கீரை பொரியல் தயார்!!!