கையால் பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியா வளரணுமா? அப்போ “இந்த” கீரை பேக் போடுங்க
முடி வளர்ச்சி என்பது இன்று பலருக்கு ஏமாற்றம் தான்.
முடி வளர்ச்சியை எதிர்பார்க்கும் போது தலைமுடிக்கு உண்டாகும் சேதத்தை கடந்து செல்வது எளிதான விஷயமல்ல.
ஆனால் அதே நேரம் அதை எல்லாம் எளிதாக வெல்வதற்கு இயற்கை பொருட்கள் பலவும் நம்மிடம் நிறைந்து கிடக்கிறது.
அவற்றில் ஆரோக்கியமாக உடலை வளர்க்கும் உணவுகளில் கீரைகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஏனெனின் கீரையில் இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடி வளர உதவும் சத்துக்கள் உள்ளன.
அந்த வகையில், கீரைகளை வைத்து எப்படி முடி வளர்ச்சியை துண்டுவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கீரை ஹேர் பேக்
- கீரைகள் - 1 கப் ( கலவை கீரைகளாகவும் இருக்கலாம்)
- தேன் - 2 டீஸ்பூன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்
- விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
கீரையை நன்றாக சுத்தம் செய்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
மிக்ஸி இல்லாதவர்கள் கீரையை ஓரளவு மசிந்து விட்டு தேன் மற்றும் எண்ணெய் கலந்து அம்மியில் அரைக்கலாம்.
இந்த கலவையை உலர்ந்த கூந்தலில் தலை முதல் நுனி வரை நன்றாக தடவி அரை மணி நேரம் காயவிட்டு நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக நாம் போடும் பேக் மண்டையில் நன்றாக ஊற வேண்டும்.
சுமாராக அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதும். சிறந்த பலனை ஒரு மாதத்திலேயே பார்க்கலாம்.
பலன்
இந்த பேக்கிற்கு கீரைகள் தெரிவு செய்யும் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, புதினா ஆகிய கீரைகளில் எதுவாகவும் இருக்கலாம். அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீரைகளையும் பயன்படுத்தலாம்.
தேன் தலைமுடிக்கு ஈரப்பதனையும் ஊட்டசத்தையும் கொடுக்கும். அத்துடன் பேக்கில் இருக்கும் வைட்டமின்கள் உச்சந்தலையை அமைதிப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
முக்கிய குறிப்பு
இந்த ஹேர் பேக்கால் ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை நாடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |