மொறுமொறு மீன் பொரியல் ரெசிபி... இனி இப்படி செய்து ருசியுங்கள்! சுவையே அலாதி
மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.
அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன்.
மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இன்று மொறுமொறு மீன் பொரியல் செ்வது எப்படி என்று பார்க்கலாம்...
தேவையான பொருள்கள்
- மீன் - 500 கிராம்
- மிளகுத்தூள் - 1 கரண்டி
- உப்பு - தேவைக்கு
- ஏலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.
மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான காரமான மிளகு மீன் வறுவல் ரெசிபி தயார்.!