வீரா சீரியல் முடிவடையப்போகிறதா? விஜியின் ஆட்டத்தை கலைக்கப்போகும் புதிய நடிகை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது என்ற தகவல் தற்போது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரா சீரியல்
சீரியலில் தற்போது வில்லி விஜியின் நாடகங்கள் கதையின் மையமாக மாறியுள்ளது. உண்மையில் கர்ப்பமாக இல்லாத விஜி, தன்னை கர்ப்பமாக உள்ளதாகக் கூறி ராமச்சந்திரன் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறாள்.
இந்த உண்மையை வீரா, மாறன் உள்ளிட்டோர் நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜியை வீட்டிலிருந்து வெளியேற்றும் பிளான், மற்றும் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக வரும் புதிய ட்விஸ்ட் ஆகியவை தொடரின் முடிவுக்கான அறிகுறிகள் என பேசப்படுகிறது.
இதற்கிடையே, நடிகை ஆல்யா மானசா ஜீ தமிழில் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இதனால், ‘வீரா’ சீரியல் முடிந்த பின் அதே நேரத்தில் புதிய தொடர் ஒளிபரப்பாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ‘வீரா’ தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அதை ஏன் முடிக்க வேண்டும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |