வீட்டில் இருந்து கடன் கொடுக்க கூடாத பொருட்கள் என்னனு தெரியுமா?
நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் கடனாக கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடன் கொடுக்க கூடாத பொருட்கள்
நாம் சில பொருட்களை கடனாகவோ, தானமாகவோ கொடுத்தால் அது நமக்கு கண்டிப்பாக தரித்திரத்தை கொடுக்கும். வீட்டை சுத்தமாக்கும் துடைப்பத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை உள்ளது.
இந்த பொருட்களை கடனாக கொடுத்தால் செல்வம் வருவதை விட தரித்திரம் வருவது தான் அதிகமாக இருக்கும். மகாலட்சுமி வாசம் செய்வதில் மிகவும் பிரதானமான பொருள் உப்பு.
நாம் வீட்டில் பயன்படுத்தும் உப்பை கடனாகவோ தானமாகவோ யாருக்கும் கொடுக்க கூடாது. இப்படி கொடுத்தால் தீராத கடனுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.
கிழிந்த துணிகளை கண்டிப்பாக தானமாக கொடுக்க கூடாது. லேசாக கிழிந்த துணிகளையும் கண்டிப்பாக தானம் பண்ண கூடாது.
இது நமக்கு வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகளை உண்டாக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் விளக்கேற்றும் குத்துவிளக்கை தானமாக கொடுக்க கூடாது.
நாம் வீட்டில் பயன்படுத்தும் கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், அரிவாள், அரிவாள்மனை, ஊசி சுத்தியல், போன்ற கூர்மையான பொருட்களை நாம் யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது.
இதுபோன்ற பொருட்களை கொடுப்பது நல்லது அல்ல.