வாஸ்து படி பணம் நகையை எங்க வைக்கனும் தெரியுமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி பணம் மற்றும் நகைகளை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு விடயமும் வாழ்க்கையில் சாதகமான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு நபரின் முன்னேற்றம், ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கின்றது.
லட்சுமி தேவியின் அருள் வீட்டில் எப்பொழுதும் நிலைத்திருப்பதற்கு வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் சரியான இடத்தில் இருக்க வேண்டும்.
அதில் ஒன்று தான் பணம் மற்றும் நகை... இவற்றினை வாஸ்து சாஸ்திரத்தின்படி எங்கு வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பணம் நகையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வீட்டில் வடக்கு திசை செல்வத்தின் அதிபதி மற்றும் குபேரரின் திசையாகவும் கருதப்படுகின்றது. வாஸ்து படி பணப்பெட்டியை எப்பொழுதும் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் அதிர்ஷடமும் செல்வமும் இரட்டிப்பாகும்.
பணப்பெட்டியை வடக்கு திசையில் வைத்திருந்தாலும், அதன் பதவு தெற்கு திசையைப் பார்த்து இருக்கக்கூடாதாம். ஏனெனில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி தெற்கிலிருந்து பயணம் செய்து வடக்கில் குடியேறுவதாக நம்பப்படுகின்றது. ஆதலால் தெற்கு திசையில் கதவு வைத்திருந்தால் பணம் நிச்சயம் தங்காது.
அதே போன்று வடக்கு திசையில் வைக்க முடியவில்லை என்றால் கிழக்கு திசையில் வைக்கலாம். இவை பாதுகாப்பானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகின்றது. கடைகளை பொறுத்தவரை காசாளர் தென்மேற்கு திசையினை நோக்கி அமர்ந்து, பணப்பெட்டியை அவரது இடது புறத்திலும், அதுவே அவர் கிழக்கு நோக்கியிருந்தால் வலது புறத்திலும் வைக்க வேண்டும்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டு வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் வைக்கக்கூடாது. அதே போன்று தெற்கு திசையிலும் நிச்சயம் வைக்கவே கூடாதாம். இவை துரதிர்ஷ்டத்தை தருவதாகவும், பணம் விரைவாக கரைந்து விடுவதாகவும் நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |