படுக்கையறை தவிர்க்கப்படவேண்டிய திசைகள் எது? வாஸ்து டிப்ஸ்
பொதுவாக ஒரு வீட்டை கட்டும் போது அதற்காக ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் பார்க்கப்படுகின்றன.
இதன்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள மாஸ்டர் படுக்கையறை தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
பிரதான படுக்கையறையை தம்பதிகள் பயன்படுத்தும் போது ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மோதல்கள் ஏற்படுமாம்.
மேலும் இது போன்ற வாஸ்து குறிப்புக்களை பின்பற்றாவிட்டால் வீட்டில் உள்ள நிம்மதியும் குறைந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில், வீட்டில் என்னென்ன வாஸ்து டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதனை விளக்கத்துடன் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து
ஒரு வீட்டிலுள்ள படுக்கையறை அதன் வடகிழக்கு மூலையில் இருந்தால், அறையின் தென்மேற்கு மூலையில் படுக்கையை வைக்க வேண்டும்.
அந்த அறையில் படுக்கும் பொழுது தெற்கு நோக்கி தலை வைத்து உறங்க வேண்டும். ஏனென்றால் வாஸ்து படி வடக்கில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல.
பரிகாரம்
- வடகிழக்கு திசையில் வாஸ்து யந்திரத்தை வைப்பது நல்லது.
- வாஸ்து தோஷங்கள் அதிகமாக இருக்கும் பொழுது படுக்கையறையின் வண்ணத்தை மாற்றுவது சிறந்தது. அதாவது நீலம், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வண்ணம் பூசலாம்.
- கிரிஸ்டல் வீட்டிலுள்ள நேர்மறையான ஆற்றலை உருவாக்கும். எனவே, அவற்றை படுக்கையறையில் வைக்கலாம்.
- வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.