இந்த பழக்கம் இருந்தால் உடனே விட்டுருங்க... கையில பணம் தங்கவே தங்காது
பணம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்கள் அவர்கள் கைவிட வேண்டிய சில கெட்ட பழக்கங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான இடத்தினை பிடித்துள்ளது. முக்கிய தேவையான பணத்தை சம்பாதிக்க மனிதர்கள் பல வழிகளில் வேலைகளை செய்து வருகின்றனர்.
ஆனால் சிலர் தவறான வழிகளில் பணத்தை சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இவை தோல்வியில் முடியும் போது பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
அதாவது புலன்களின் மீது கட்டுப்பாடு இல்லாதவர்கள் பண இழப்பை சந்திப்பார்கள் என்று சாணக்கியர் சில நூறு ஆண்டுகள் முன்பு இவ்வாறு விவரித்துள்ளார்.
அவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு நாம் கைவிட வேண்டிய கெட்ட பழக்கங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
விட வேண்டிய கெட்ட பழக்கங்கள் என்ன?
புத்திசாலி நபர் எப்பொழுதும் தனது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமாம். வைக்காவிட்டால் மற்றவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட இவர்கள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார். வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியிருக்கும்.
தேவையில்லாமல் வரும் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். அதிக செலவு செய்யும் தன்மையை கட்டுக்குள் வைக்க வேண்டுமாம்.
பேராசை எண்ணம் இருக்கவே கூடாது. சில தங்களது தேவைகளை நிறைவேற்ற மிக இனிமையாக பேசுவார்கள். இவர்களின் பேச்சை நம்பினால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும். ஆதலால் பேராசையுடன் இனிமையாக பேசுபவர்களின் வலையில் சிக்கிவிட வேண்டாம்.
வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்க விரும்பவில்லை என்றால், சோம்பலை கைவிட வேண்டும். ஏனெனில் சோம்லாய் இருப்பவர்கள் எதையும் சாதிக்க முடியாதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |