பர்ஸில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்! செல்வத்தையே அழித்துவிடுமாம்
பர்ஸ் வைத்திருக்கும் பலரும் பணம் நிறைந்திருக்க வேண்டும் செலவு அதிகம் ஆகிவிடக்கூடாது என நினைப்பார்கள்.
ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய நிலை கூட உண்டாகிறது.
அதன்படி வாஸ்து சாஸ்திரத்தில். பர்ஸில் பணம் என்றென்றும் நிறைந்திருக்க எவற்றை எல்லாம் வைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

வைக்கூடாத பொருட்கள்
பர்ஸில் கத்திகள், ஊசிகள், சாவிகள் போன்ற கூர்மையான அல்லது உலோகப் பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள்.
இப்படிச் செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து, அந்த நபரின் வாழ்வில் படிப்படியாக வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்குகிறது.
ரசீது மற்றும் பில்கள்
பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம். அவை அவசியம் என்றால், அவை தேவைப்படும் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
பலர் வீட்டின் அனைத்து பில்களையும் பர்ஸில் வைத்துக்கொண்டு உள்ளார்கள். அவை ராகு வடிவம் பெற்று பண இழப்பு, தேவையற்ற செலவுகளை உண்டாக்கும்.
முன்னோர்களின் படங்கள்
பலரும் இறந்த முன்னோர்களின் படங்களை வைத்து இருப்பார்கள். முன்னோர்களை மதிக்க வேண்டும். ஆனால் அவர்களின் புகைப்படங்களை இப்படி பர்சில் வைத்திருப்பது தவறு.
உங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் முன்னோர்களின் படங்களை வைப்பது நல்லது. தெய்வங்களின் படம் அதேபோன்று பர்ஸில் தெய்வங்களின் படத்தை வைத்திருப்பதும் தவறு. கடவுளின் புகைப்படத்தையும் பய பக்தியுடன் வீட்டில் வைக்க வேண்டும்.
இல்லையெனில் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கசங்கிய நோட்டுகள்
பர்ஸ் அல்லது பணப்பையில் ஒரு நோட்டை கசக்கி, ஒழுங்கற்ற முறையில் வைத்திருக்க வேண்டாம். இதனால் அன்னை மகாலட்சுமி கோபமடைந்தார். எப்போதும் பணத்தை நன்றாக மடித்து, ஒழுங்காக வைத்திருங்கள்.