உங்கள் பாதையை கடக்கும் கருப்பு பூனை துரதிர்ஷ்டத்தை கொண்டு வருமா?
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது.
பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் தாங்கள் செல்கிறார்கள்.
இருப்பினும் சிலரின் கருத்துபடி பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று பலர் நினைக்கிறார்கள். அது வலமிருந்து இடமாக நகர்ந்தால், அது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
துர்திஷ்டமாக கருதப்பட காரணம்
ஒரு பூனையின் அழுகை கூட சாதகமற்றதாக கருதப்படுகிறது. பல நாடுகள் பூனைகளை அசுபமாக கருதுகின்றன.
பழங்காலத்தில் மக்கள் காடு வழியாகச் செல்லும் போது, ஒரு பூனை அவர்களின் வழியைக் கடந்து காட்டு விலங்கைப் பின்தொடரும் என்று நம்பப்பட்டது.
பூனைகள் இரவில் வேட்டையாடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் பூனைகளின் கண்கள் இரவில் ஒளிரும். குதிரைகள், காளைகள், பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களைக் கண்டு பயப்படுகின்றன.
பூனைகள் எப்போது துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகின்றன. அதிலும் கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனே நம்மவர்கள் மத்தியில் பயம் தொற்றிக்கொள்ளும் வழக்கம் இருக்கின்றது.
கருப்பு நிறம் பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது. ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால் நீங்கள் ஆபத்தை சந்திக்கப்போவதை உணர்த்துவதாகவே இது கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |