Vastu Tips: வீட்டில் பணபிரச்சனை தீர வேண்டுமா? மஞ்சளை இந்த இடத்தில் வைங்க
வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, நிதி ஆதாயம் பெருக வாஸ்து சாஸ்திரத்தின் படி மஞ்சளைக் கொண்டு செய்ய வேண்டிய சில விதிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மங்ககளகரமான பொருளாக கருதப்படும் மஞ்சளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய சில விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மஞ்சளும் வாஸ்து சாஸ்திரமும்
வீட்டின் நுழைவாயிலில் மஞ்சளை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் எப்பொழுதும் வீட்டில் நிலைத்திருக்குமாம்.
பணப்பிரச்சனையை எதிர்கொள்பவராக இருந்தால் பண பெட்டகத்தில் ஒரு கட்டி மஞ்சளை மஞ்சளை வைத்தால் நிதி ஆதாயம் மேம்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது பாக்கெட் அல்லது பணப்பையில் மஞ்சள் கட்டியை வைப்பது லெட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை அளிப்பதுடன், செல்வம் எப்பொழுது வீட்டில் நிலைத்திருப்பதடன், பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |