இந்த பொருள் உங்க வீட்டில் இருந்தா சகல செல்வங்களும் வீடு தேடி வரும்
வாஸ்து சாஸ்திரம் பற்றி பலருக்கும் பல விதமான அபிப்பிராயங்கள் இருக்கும். வீடு கட்டுவதலில் இருந்து வீடு, காணி வாங்குவதிலிருந்து பல விடயங்களுக்கு இந்த சாஸ்திரங்களைப் பார்ப்பதுண்டு.
இவ்வாறு இருக்கும் நிலையில் சிலரின் வீடுகளில் இந்தப் பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறையும் என்பது ஐதீகம்.
வீட்டில் வலம்புரிச்சங்கு
அந்தவகையில், உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் வீட்டிற்கு எந்த தீயசக்திகளும் எம்மை அண்டாது.
ஏனெனில் வலம்புரிச் சங்கானது மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த போது இந்த வலம்புரிச் சங்கும் உதித்தது என்பது ஒரு வரலாறு. மஹாலட்சுமி எப்போது செல்வச் செழிப்புடன் இருப்பவள்.
இதனால் அந்த வலம்புரிச்சங்கை வீட்டில் வைப்பதாலும் பன் மடங்கு செல்வம் பெருகும். சங்குகளில் பல வகைகள் உண்டு அதில் பல சக்திவாய்ந்த சங்கு தான் வலம்புரி சங்கு.
அமிர்தத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த வேளையில் 16 வகைப் பொருட்களில் இந்த வலம்புரிச் சங்கும் தோன்றியது. இந்த வலம்புரிச் சங்கை இடக்கையில் ஏந்தியும் மற்றொரு கையில் மஹாலட்சுமியையும் ஏந்திய படி தோற்றியிருக்கிறார் திருமால்.
அதேபோல கண்ணனில் இருந்து பாண்டவர்கள் வரையில் அனைவரும் ஒவ்வொரு சங்கை கொண்டிருக்கின்றனர்.
ஆயிரம் இடம்புரிச் சங்குகள் இருந்தாலும், அதில் ஒரே ஒரு வலம்புரிச் சங்கு இருக்கும், ஆயிரம் வலம்புரிச் சங்குகள் இருந்தாலும் அதில் சலஞ்சம் என்ற ஒரு விசேஷ சங்கு இருக்கும்.
இந்த சங்குகள் ஒரு புனிதப் பொருளாகத்தான் பார்க்கப்படுனகிறது. இந்த சங்கு இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளும், தோஷங்களும், கண்திருஷ்டி போன்ற பேச்சுக்களுக்கு இடம் இருக்காது.
வீட்டிற்கு வலம்புரிச்சங்கு
நீங்கள் புது வீடுகள் வாங்கும் போது வீடுகளை கட்டும்போதும் இந்த வலம்புரிச்சங்குகளை வீட்டில் வாங்கி வைக்கும் போது வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் வீட்டில் பெருகி வழியும், அதுமட்டுமல்லாமல் எப்போதும் மன அமைதியாக இருக்கும்.
சொந்த தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் செய்வீர்கள். வியாபாரம் மேன்மையடையும் பணம் பஞ்சம் இல்லாமல் புழங்கும். வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.