வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பினால் அவதிப்படுகிறீர்களா? தினமும் இதை சாப்பிட்டாலே போதும்
தற்போது பலரும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்து, உடலுக்கு போதுமான வேலையைக் கொடுக்காமல் இருப்பதால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தேங்கி தொப்பையை உண்டாக்குகின்றன.
இதனை ஆரம்பத்திலே குறைக்காவிட்டால் டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
அந்தவகையில் தற்போது தொப்பையை குறைக்க என்னென்ன எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
இஞ்சி எலுமிச்சை சாறு
ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூளை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து கிளறி, மேலே சிறிது துருவிய டார்க் சாக்லேட்டைத் தூவி குடித்தால், தொப்பை குறையும்.
பெற்ற அம்மாவை ஏமாற்றி அழைத்து வந்து மகன் செய்த காரியம்! கலங்க வைக்கும் காட்சி
தேன் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி, அதை கொதிக்க வைத்து, அதில் 5-7 புதினா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சிறிது க்ரீன் டீ இலைகளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
ஒரு கப் அன்னாசி ஜூஸுடன் ஒரு கப் இளநீர் மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் மற்றும் 1 சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்தால், உடல் சூடு குறைவதோடு, தொப்பையும் குறையும்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில், 1 எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வீங்கி பானை போன்று இருக்கும் தொப்பை குறையும்.