பணத்தையும் செல்வத்தையும் ஈர்க்க வரவேற்பறையை எப்படி வைக்க வேண்டும் தெரியுமா?
வீட்டில் பணத்தையும் செல்லவத்தையும் நல்ல எண்ணங்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் வீட்டின் வரவேற்பறையில் வாஸ்த்துபடி என்ன பொருட்களை வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
வாஸ்து டிப்ஸ்
நமது வீடின் ஒட்டுமொத்த அழகையும் எடுத்து சொல்வது வீட்டின் வரவேற்பறை தான். நாம் இதில் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை செய்தால் அது நமக்கு பணத்தை ஈர்க்க வழி வகுக்கும்.
அந்த வகையில் வரவேற்பறையின் நிறம், மீன் தொட்டி மற்றும் பல விஷயங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. வாஸ்து படி, அறையை அழகாக அலங்கரித்தால் செல்வம், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வாஸ்து படி, வாழ்க்கை அறையின் நுழைவாயில் தெற்கு திசையில் இருக்கக்கூடாது. இது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த அறையில் மரச்சாமான்கள் மற்றும் கனமான பொருட்களை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும். பலர் சரவிளக்கை லிவ்விங் ரூமின் மையத்தில் தொங்கவிடுகிறார்கள்.
ஆனால் வாஸ்து படி தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது வீட்டில் செல்வமும் வளமும் பெருகும். இந்த அறைக்கு வெள்ளை, வெளிர் நீலம், மஞ்சள் அல்லது பச்சை வண்ணம் பூசப்பட வேண்டும்.
இப்படி செய்வதால் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதற்கு நீல நிறத்தை வரவேற்பறையில் பயன்படுத்தலாம்.
இதை எல்லாவற்றையும் விட காலையில் உதிக்கும் சூரியனின் ஒளி படும் வகையில் இது இருக்க வேண்டும். இப்படி வரவேற்பறையை வைத்து பாருங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் வராது.