மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் போதும்.. தரித்திரம் விரட்டி கூட ஓடிவிடுமாம்!
பொதுவாக வீடுகளில் சில சமயங்களில் திடீரென கஷ்டங்கள் மற்றும் வியாபாரங்களில் நட்டங்கள் வரலாம்.
மாறாக இந்த இரண்டு விடயங்களும் தொடர்ந்து வீடுகளில் தங்கி விட்டால் காலப்போக்கில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து விட்டால் பணம் இருக்காது, அடிக்கடி யாராவது ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்.
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் வீடுகளில் என்ன மாதிரியான ஆன்மிக விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தரித்திரியங்களை விரட்டும் புகை
வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பூஜையறையில் விளக்கேற்றிய பின்னர் சூடம் காட்டி பிராத்தனை செய்யுங்கள்.
பின்னர் லவங்கப்பட்டை, பரங்கிப்பேட்டை, வெண்கடுகு, ஏலக்காய், குங்கிலியம், எலுமிச்சம் பழ காய்ந்த தோல், இந்த பொருட்களை எல்லாம் பொடித்து அதனை ஒரு போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
இந்த பொடியை நெருப்பில் போட்டு இதிலிருந்து வரும் சம்பிராணி புகையை வீடு முழுவதும் பிடிக்க வேண்டும்.
அத்துடன் இந்த வழிபாட்டை தவறாமல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்கள் தவறாமல் இந்த புகையை வீட்டிற்குள் போட்டு வாருங்கள்.பலன் நிச்சயம் கிடைக்கும்.
வீடுகளில் குடிக் கொண்டிருக்கும் தரித்திரியங்கள் எல்லாம் இந்த பூகைக்கு அரண்டு ஓடி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |