தரித்திரத்தை கொண்டு வரும் மணி பிளாண்ட்! மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க
நாம் வீட்டில் வளர்க்கும் சில செடிகள் நமக்கு ஏற்படும் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதுடன், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருகின்றது.
சாஸ்திரங்களின் படி வீட்டில் எந்தெந்த செடிகளை வைத்த அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கற்றாழை
கற்றாழையை வீட்டு வாசலில் மற்றவர்களின் கண்பார்வை படும் படியாக வளர்த்தால் நம்மை தேடி அதிர்ஷ்டம் வருமாம்.
அதற்காக புதர் மாதிரியாகவும் வளர்க்க வேண்டும் என்றில்லாமல் சிறிய செடியாக வளர்த்தாலே போதுமாம்.
வெற்றிலை
வீடுகளில் வெற்றிலை கொடி வளர்ப்பது மிகவும் அதிர்ஷ்டமாகும். ஆம் வெற்றிலையை ஆஞ்சநேயருக்கு மாலையாக தொடுத்து சாற்றினால், எதிரிகளின் தொந்தரவு விலகிவிடுமாம்.
ஆனால் வெற்றிலையை மட்டும் தனியாக வளர்க்கக்கூடாதாம். மற்ற செடிகளுடன் சேர்த்தே வளர்க்க வேண்டும்.
மணி பிளாண்ட்
மணி பிளாண்ட்டை நாம் கவனமாக பார்த்து வளர்க்க வேண்டும். ஆம் இவற்றை வீட்டிற்குள் அல்லது பால்கனியில் வைத்து வளர்க்க வேண்டுமாம். ஏரேனும் திருடி சென்றுவிட்டால், நமக்கு தரித்திரம் ஏற்பட்டு விடுமாம்.
திருடியவர் அதிர்ஷ்டசாலியாகி விடுவார் என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.
முல்லை
பூக்களின் ராணியாக இருக்கும் முல்லை பூவை வீட்டில் வைத்து வளர்த்தால், குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் அதிர்ஷ்டமும் ஏற்படும். மேலும் இதனை வடகிழக்கு மூலையில் தான் இதனை வைக்க வேண்டும்.
பாம்பு கற்றாழை
நச்சுக்களை உறிஞ்சி காற்றில் இருக்கும் ஒவ்வாமைகளை குறைத்துவிடுவதில் பாம்பு கற்றாழை பெரிதும் உதவி செய்கின்றது. அதிர்ஷ்டத்தினை அள்ளித்தருணம் இதனை படுக்கையறையில் வைத்தால் மிகவும் நல்லதாம்.