புறாவை வீட்டில் வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடுமா? பலருக்கும் தெரிந்திடாத உண்மை
நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பல வாசகங்கள் கூறுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம். உதாரணமாக நகத்தை கடித்தால் தரித்திரம், தாழ்ப்பாளை ஆட்டினால் சண்டை வரும், வீட்டில் புறா வளர்க்கக்கூடாது என்றெல்லாம் கூறுவார்கள்
அதற்கான அர்த்தம் நமக்கு புரியாமல் அதனை பின்பற்றாமலே பல சிக்கல்களை சந்திப்பதும் தற்போது நிகழ்கின்றது. இதற்கான அர்த்தம் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
தாழ்ப்பாள் ஆட்டினால் சண்டை வருமா?
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால் கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
வீட்டுக்குள்ள நகம் வெட்டினால் விளங்காதா?
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி, பாரிய வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
நகத்தைக் கடித்தால் தரித்திரம்...
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும். இதற்காகவே அவ்வாறு கூறுகின்றனர்.
உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
மாலை நேரத்தில் குப்பையை கொட்டினால் லெட்சுமி போய்விடுவாளா?
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.
வீட்டில் புறா வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடுமா?
வீட்டில் புறா வளர்க்கக்கூடாது. ஏனெனில் புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. இதனால் வீடு தேடி விஷப்பாம்புகள் வரும்.