வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா? பலரும் அறியாத ஆச்சரியம்
ஆமை சிலையை வீட்டில் வைக்கலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆமை சிலைகள்
ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். இதனை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம்.
பொதுவாக இந்து மத நம்பிக்கையின் படி, சில விலங்குகள் மற்றும் பறவைகள் அதிர்ஷ்டத்தினை கொடுப்பதாக கருதப்படும் நிலையில், வீட்டில் ஆமை சிலையை வைப்பதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக நம்பப்படுகின்றது.
ஆமை ஓடு மோதிரத்தினை வெள்ளிக்கிழமை, அட்சய திருதியை, தீபாவளி, தனத்ரயோதசியில் அணிந்தால் மங்களரமானதாகவும், நிதி நிலைமையையும் மேம்படுத்துமாம்.
வீட்டில் உலோக ஆமையை வைத்திருப்பவர்கள் வடக்கு திசையில் வைத்தால் அது மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது. ஒரு வெற்று காகிதத்தில் சிவப்பு பேனாவால் உங்களது விருப்பத்தை எழுதி, ஆமைக்குள் வைத்தால் விரைவில் நிறைவேறுமாம்.
ஜோதிட ரீதியாகப் பார்த்தால், வீட்டில் ஆமை யந்திரம் வைப்பது சிறப்பான பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாள் ஆமை யந்திரம் அமைப்பதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இது தவிர, சுப நேரத்திலும் நிறுவலாம்.
பிரதான நுழைவாயிலில் ஆமை படத்தை வைத்தால் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், எதிர்மறை ஆற்றல் விலகி, குடும்பத்தில் அமைதி நிலவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |