வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்
பொதுவாக வீடுகளில் துளசி போன்ற செடிகளை வளர்ப்பதை விட வீட்டிற்குள் இருக்கும் மணி பிளாண்ட்டுகளை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஆனால் இந்த செடியை வைக்கும் பொழுது திசை பார்த்து நட வேண்டும். அப்போது தான் நாம் நினைத்த பலனை வீட்டிற்கு கொடுக்கும். நம் வசிக்கும் வீடுகளில் பொதுவாகவே எதிர்மறை மற்றும் நேர்மறை சக்திகள் இருக்கின்றன.
இதனை கட்டுபடுத்த இது போன்ற சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பது அவசியமாகும்.
அந்த வகையில் வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருந்தால் அதனை எவ்வாறு எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
மணி பிளாண்ட் வாங்கினால் இவற்றை கண்டிப்பாக செய்ங்க
Image - iProperty
1. நேர்மறை அதிர்வுகள் வீட்டிற்குள் வரும் போது எதிர்மறையானவை அவற்றை தடுத்து நிறுத்துக்கின்றது இது தான எமது நம்பிக்கையாக இருக்கின்றது. இது தான் வாஸ்து சாஸ்திரத்தின் ஒரு அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
2. மணி பிளாண்ட் செடியை எப்போதும் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனெனின் இந்து மதம் சுக்கிரன் கிரகத்தால் ஆளப்படுவது இந்த திசையில் தான். இந்த கூற்றை பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
3. இது போன்ற மணி பிளாண்ட்களை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. ஏனென்றால் இந்த திசை வியாழனால் குறிக்கப்படுகின்றது.
4. வீட்டின் வடகிழக்கு மூலையில் மணி பிளாண்ட் செடியை வைத்திருப்பது கெட்ட சக்தியை ஈர்க்கிறது. அத்துடன் கிழக்கு திசைகளில் மணி பிளாண்ட் செடிகளை வளர்ப்பது துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற தவறுகளை விடும் போது அதிகமான மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
5. மேலும் இது போன்ற செடிகள் வளரும் போது எந்த காரணம் கொண்டும் தரையை தொடக்கூடாது. அத்துடன் காய்ந்து போனால் போல் இருக்கவே கூடாது. இவ்வாறு இருந்தால் வீட்டில் தத்திரியங்கள் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |