முகத்தை பொலிவாக்கும் துளசி ஃபேஸ் பேக்! கொள்ளை அழகில் ஜொலிக்கலாம்
துளசியானது பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டது.
இது உடலுக்கு மட்டுமில்லாமல் நமது சருமத்துக்கும் சிறந்ததாக காணப்படுகின்றது. துளசியானது சருமத்தை பொலிவாக்குகிறது.
இதில் விட்டமின் ஏ,சி,கே, கல்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன.
image - Healthline
வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால் முகம் கருத்து போய்விடும். அப்போது துளசியில் விட்டமின் சி இருப்பதால் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவுவதோடு, கரும்புள்ளிகளையும் சரியாக்கும்.
துளசி இலையை அரைத்து தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருவிலிருந்து விடுதலை பெறலாம்.
image - India.com
அதுமாத்திமின்றி துளசியில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் தோல் சிவப்பாகுதல், எரிச்சல், தோல் சுருக்கம் என்பவற்றை குறைக்கிறது.
மேலும் துளசி இலைகளை நன்றாகக் கழுவி தயிர் அல்லது யோகர்ட்டில் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும். துளசியில் இயற்கையான எண்ணெய் இருப்பதால் சருமத்தின் தண்ணீர் பதத்தை இழக்காமல் பாதுகாக்கிறது. \
image - News18