வீட்டில் பணமழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் இந்த திசையில் வைக்க வேண்டுமாம்!
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில தாவரங்களை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
அந்த வகையில், நமது வீடுகளுக்குள் அதிர்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம்.
அதன்படி, மணி பிளான்ட் தாவரம் வீட்டில் உள்ள காற்றில் இருக்கும் மாசுகளை அகற்றி சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று வாஸ்து குறிப்பு கூறுகிறது.
பலர் தமது வீடுகளின் பால்கனிகளில் அல்லது வராண்டாக்களில் மணி பிளான்ட்டை வளா்த்து வருகின்றனர். எனவே, மணி பிளான்ட்டை தவறான திசையில் வைத்தால் அது குடும்பத்திற்குள் குழப்பத்தையும், எதிா்மறையான தீய சக்திகளையும் ஏற்படுத்திவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
ஆகவே, எந்த திசை யில் மணி பிளான்ட்டை வைத்தால் நன்மைகள் உண்டாகும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
வைக்ககூடாத திசை?
மணி பிளான்ட்டை வடகிழக்குத் திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் வடகிழக்குத் திசை என்பது மிகவும் எதிா்மறையான திசையாகக் கருதப்படுகிறு.
எனவே, வடகிழக்குத் திசையில் மணி பிளான்ட்டை வைத்தால் நெருப்பில் அமா்வதற்குச் சமமாகிவிடும். மணி பிளான்ட்டை சரியான திசையில் வைத்தால் அது பணத்தை மட்டும் அல்லாது, பல நல்ல உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
வாடிய இலைகளை கத்தரிக்கவும் முக்கியமாக மணி பிளான்ட்டின் இலைகளை வாடவிடக்கூடாது. அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். மணி பிளான்ட்டிற்கு தினமும் தண்ணீா் ஊற்ற வேண்டும்.
ஒருவேளை இலைகள் வாடிவிட்டால் அவற்றை உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும். ஏனெனில் உலா்ந்த அல்லது வாடிய இலைகள் எதிர்மறையான சக்திகளைக் கொண்டிருக்கும்.
மணி பிளான்ட் கொடிகளை தரையில் படரவிடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு படரவிட்டால் வீட்டிற்குள் எதிா்மறை சக்திகள் அதிகாிக்கும்.
வீட்டிற்கு வெளியில் மணி ப்ளான்ட் வைக்கலாமா?
இதில், மணி பிளான்ட்டை கண்டிப்பாக வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது. அதை வீட்டிற்குள் வைத்தால் தான் ஏராளமான நன்மைகள் உண்டாகும். அதோடு சாியான திசையில் அதை வைக்க வேண்டும். அழுக்கு படிந்திருக்கும் இடங்களில் மணி பிளான்ட்டை வைக்கக்கூடாது.
சுத்தமான இடத்தில் தான் வைக்க வேண்டும். சரியான திசை எது? மணி பிளான்ட்டை வைப்பதற்கு உகந்த சாியான திசை தென்கிழக்குத் திசை ஆகும்.
இந்த திசையில் வைத்தால் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் ஏற்படும். எனவே, மணி பிளான்ட்டை வீட்டிற்குள்ளோ அல்லது வராண்டாவிலோ மிக எளிதாக வைக்கலாம்.
மேலும், இதை தண்ணீாிலும் வைக்கலாம். இதைப் பராமாிக்க அதிக செலவு ஆகாது. இறுதியாக சூாிய வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே மணி பிளான்ட்டை வைக்க வேண்டும்.