சாஸ்திரப்படி துளசி செடியை எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?
பொதுவாக அநேகமான வீடுகளில் துளசி செடி வளர்ப்பார்கள்.
இது சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்றும் வளர்ப்பார்கள்.
இந்து மதத்தின்படி, துளசி செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. வீடுகளில் வைப்பதற்கான முக்கிய காரணம், துளசி செடி லட்சுமி தேவியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட துளசி செடி வளர்ப்பவர்கள் அதனை குறிப்பிட்ட திசையில் வைத்தால் அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு இன்பம் பெருகும்.
அந்த வகையில் ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரம் படி துளசி செடியை எங்கு வைப்பது என்ற தகவலை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
துளசி செடி வளர்ப்பு
துளசி செடி அதிர்ஷ்டமான செடியாக பார்க்கப்படுகின்றது. இந்த செடியை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். அத்துடன் துளசி செடியை பார்த்து பின் அன்றைய நாளை துவங்கினால் அன்றைய நாள் அமைதியாகவும் நிம்மதியாகவும் செல்லும் என சிலர் நம்புகிறார்கள்.
துளசி செடியை எந்த திசையில் வளர்க்க வேண்டும்?
1. வீட்டில் துளசி செடி வளர்க்கும் பொழுது வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வளர்க்க வேண்டும். இவை இரண்டும் நீரின் திசை என்பதால் வீட்டிற்குள் வரும் எதிர்மறையான சக்திகள் அழிந்து விடும்.
2. துளசி மூலிகையை கவனமாக வளர்க்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் வளர்க்கும் துளசி செடி காய்ந்து போகக் கூடாது. ஆகையால் வீட்டிலுள்ள பெண்கள் அதனை கவனமாக பார்த்து கொள்வார்கள். அப்படி பார்த்தும் காய்ந்து போனால் அது வீட்டிற்கு ஏதோ தீய விஷயம் நடக்க போகின்றது என்பதனை குறிக்கிறது.
3. வாஸ்துப்படி, வீட்டின் தென்கிழக்கு பகுதி "நெருப்பின் திசை" எனப்படும் திசையில் துளசி செடி வைக்கக் கூடாது. மேலும் துளசி செடியை தரையில் நடக் கூடாது. மாறாக தொட்டியொன்றில் நடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |