Varisu: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிபி... அதிர்ச்சியில் தமிழ் - ஜனா! வாரிசு சீரியல் அப்டேட்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலான வாரிசு சீரியலின் தற்போதைய ப்ரொமோ காட்சி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வாரிசு சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் தான் வாரிசு.. மிகவும் வித்தியாசமான கதை களமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி அவதானித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் ஜனகாம்பள் தனது ஹோட்டல் சாம்ராஜியத்தில் கொடிகட்டி பறக்கின்றார். ஆனால் அவர் தற்போது இருக்கும் பணக்கார வாழ்க்கைக்கு வருவதற்கு பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார்.
மேலும் தனது உழைப்பினால் இப்படியொரு சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கு பின்பு இவருடைய தொழில், சொத்து இவற்றிற்கு வாரிசு யார் என்பதிலிருந்து கதை ஆரம்பமாகின்றது.
மற்றொரு புறம் தமிழ் என்ற பெண்ணின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலையில் அப்பா காணாமல் போகின்றார்.
தமிழ், சிபியின் மோதல்
முதல்நாள் வரை பணக்காரராக இருந்த தமிழ் குடும்பம் தந்தை காணாமல் போன பின்பு திருமணமும் நின்றுள்ளதுடன், சொத்துக்களும் கைவிட்டு போகின்றது. ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் பிழைப்பு தேடி சென்னைக்கு வருகின்றனர்.
அங்கு தமிழ் பல அவமானங்களை கடந்து வந்தாலும், ஜனகாம்பாளை ஒரு கட்டத்தில் சந்திக்கின்றார். ஜனகாம்பள் தமிழின் நடவடிக்கைகளை நன்று அறிந்து, தனது பேரனை வாரிசாக நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தனக்கு உதவியாளராக இருந்த தமிழை வாரிசாக அறிவித்துள்ளார்.
இதனால் பேரன் சிபி மற்றும் தமிழ் இருவரும் எலியும், பூனையுமாக மாறியுள்ளனர். இதில் தமிழ் அம்மாவிற்கும் ஜனகாம்பாளிற்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ள நிலையில், அவை இன்னும் வெளிவராமல் சீக்ரெட்டாகவே இருந்து வருகின்றது.
தற்போது கோவில் திருவிழா ஒன்றிற்கு சென்ற போது, சிபி சண்டை போட்டியில் கலந்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்கின்றார். சிபியின் நிலையைக் கண்டு தமிழ், ஜனகாம்பாள் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |