சைவ விரும்பிகளுக்கு 5 நிமிடங்களில் செய்யும் சூப்பரான சாதம் ரெசிபி!
பொதுவாக வீட்டில் சமைக்கும் போது அம்மாக்களுக்கு எதை என்ன மாதிரி செய்வது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் தான் சமைத்து முடித்த பின்னர் "நல்லா இருக்கா?" என்ற கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள்.
மேலும் தினமும் காலை, மற்றும் பகல் வேளைகளில் சாதம், கறி, கீரை என சாப்பிடுவதற்கு கொஞ்சம் சிரமாக இருக்கும் அல்லது குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் செய்ய வேண்டும் என நினைப்போம்.
இப்படியானவர்களுக்கு இலகுவாக செய்யக் கூடிய சூப்பரான சாதம் ரெசிபி குறித்த பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப் அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு + உழுந்து - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
தக்காளி - 2
கொடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மசாலா பொருட்கள்
வர மிளகாய் - 4
பூண்டு - 10
செய்முறை
முதலில் தேவையானளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் அரிசி போட்டு சாதத்தினை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் பின்னர் மாசாலாவிற்காக பூண்டு, மிளகாய் இரண்டை கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
இது முடிந்த பின்னர் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேவையானளவு எண்ணெய் விட்டு அதில் கடுகு, உழுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, கொடை மிளகாய் ஆகியவற்றுடன் கொஞ்சமாக உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
2 - 3 நிமிடங்களுக்கு பின்னர் நாம் அரைத்து வைத்து மாசாலாவை ஒரு தேக்கரண்டி சேர்த்து வதங்க விடவும்.
நன்றாக வதங்கியதும் அதில் சாதத்தினை சேர்ந்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும். இறுதியாக கொஞ்சம் உப்பு தூவி இறக்கினால் சூப்பரான மறக்கறி சாதம் தயார்!