10 நிமிடத்தில் சுவையான முட்டை மசாலா வறுவல் செய்ய வேண்டுமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் முட்டை என்றால் அதீத பிரியம் இருக்கும்.. எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், சுவையான முட்டை மசாலா வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்....
தேவையான பொருட்கள்
வேக வைத்த முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
பட்டை - 1
கிராம்பு - 1
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு வாணலியில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், தனியா, மிளகு சேர்த்து மிதமான சூடில் வறுக்கவும். ஆறியதும், இதனை மிக்சி ஜாரில் போட்டு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..
அடுத்து, மற்றொரு வாணலியில் 2 பேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதில், வேக வைத்து பாதியாக வெட்டி வைத்த முட்டையை சேர்த்து மிதமாக வறுத்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொறிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்றாசக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்த மசாலா, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், தக்காளி மற்றும் உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயமும், எண்ணெய்யும் தனியாக பிரிந்தப் பிறகு, முட்டையை சேர்த்து மிதமாக கிளறவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தூவி இறக்கினால் சுவையான முட்டை மசாலா வறுவல் ரெடி..!