இனி சாதம் மிஞ்சி வீணாகி விடும் என்ற பயமே வேண்டாம்! காலையுணவை கவர் செய்யும் சூப்பரான ரெசிபி..
பொதுவாக வீடுகளில் இரவு சாதம் மிஞ்சி விட்டால் அதனை என்ன செய்வது குறித்து கவலை இருக்கும்.
இதன்படி, சிலர் சாதம் மிஞ்சி விட்டால் தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு சேர்த்துக் கொடுப்பார்கள். இந்த உணவுகளில் புரதச்சத்துமிக்கவையாகவும் சிறந்த காலையுணவாகவும் பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சாதம் மிஞ்சி விட்டால் எளிய முறையில் கஞ்சி தயார் செய்துக் குடிக்கலாம். இந்த கஞ்சி இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
சாதத்தினை ஊற வைத்து பெறும் கஞ்சி மற்றும் சாதம் வடிக்கும் போது பெறப்படும் கஞ்சி மேற்குறிப்பிட்ட இரண்டு கஞ்சிகளுமே உடலுக்கு ஊட்டசத்துக்களை அள்ளித்தரும் கஞ்சிகள் தான்.
இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். மேலும் இந்த கஞ்சை குடிப்பதால் குணப்படுத்த முடியாத அல்சர், நெஞ்செரிச்சல், சமிபாட்டு பிரச்சினைகள் என்வற்றை குணப்படுத்த முடியும்.
அந்தவகையில் சாதக்கஞ்சியை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.